சிறுவன் உடம்பில் மாற்றம் தென்பட்டதும் பலி..அதே ஊரில் மரண வாசலில் 439 பேர்..கேரள அரசே அலறும் சோகம்

x

கேரளாவில் நிபா வைரசால் சிறுவன் உயிரிழந்த நிலையில், அதே பகுதியில் 439 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்து 14 வயது சிறுவன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பாண்டிக்காடு பகுதியில் 7 ஆயிரத்து 239 வீடுகளில் சுகாதாரத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதில், 439 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் நான்கு பேர், உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த‌து தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு நிபா வைரஸ் சோதனை நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே, சிறுவனுடன் தொடர்பு பட்டியலில் உள்ள 13 பேரின் மாதிரிகள் புனே வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. அதில் 9 பேரின் முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளது. நிபாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவனின் குடும்ப உறுப்பினர்களின் பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்