வெடிக்கும் பாலியல் புகார்கள்.. மவுனம் கலைக்கும் மோகன்லால்

x

கேரள திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரள நடிகர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த நடிகர் மோகன்லால் இன்று செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.

கேரள மாநில நடிகைகளுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக, அம்மாநில அரசு அமைத்த ஹேமா கமிட்டி தனது அறிக்கையை சமர்ப்பித்தது தென்னிந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகைகள் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின்பேரில், கேரள முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் கேரள திரையுலக பிரபலங்கள் இதுவரை வெளிப்படையாக கருத்து தெரிவிக்காத நிலையில், கேரள நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நடிகர் மோகன்லால் திருவனந்தபுரத்தில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தனது கருத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்