கொட்டும் மழையில் கேரளா கட்டும் தடுப்பணை.. பொங்கி எழுந்த தமிழ்நாடு அரசு.. | Thanthitv
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி ஆற்றின் நீர் ஆதாரங்களில் ஒன்றாக சிலந்தியாறு விளங்குகிறது. இந்நிலையில், வட்டவடா பகுதியில் சிலந்தியாற்றின் குறுக்கே, இரண்டரை கோடி ரூபாய் செலவில், 120 அடி நீளம் மற்றும் 10 அடி உயரத்தில் கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சட்டப்போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு அரசு உறுதி அளித்தது. இந்த தடுப்பணை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தேசிய வனவிலங்கு வாரியத்திடம் கேரள அரசு அனுமதி பெற்றுள்ளதா? என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக, தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் நாளை தங்கள் வாதத்தை முன்வைக்க உள்ளன. இந்த சூழலில், கொட்டும் மழையிலும் சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
Next Story