நட்சத்திர நடிகையின் ரூமுக்குள் புகுந்து செய்யக்கூடா அசிங்கத்தை செய்த தயாரிப்பாளர்...

x

நட்சத்திர நடிகையின் ரூமுக்குள் புகுந்து செய்யக்கூடா அசிங்கத்தை செய்த தயாரிப்பாளர்...தப்பி ஓடிய நடிகை...ஹீரோவான ஆட்டோ டிரைவர்

அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு மறுத்ததால், பட வாய்ப்பை இழந்ததோடு, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறி நடிகை ஒருவர் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுகளால் ஸ்தம்பித்து போயுள்ள கேரள திரையுலகில் மற்றொரு புயலை கிளப்பியுள்ளார் நடிகை ஷர்மிளா...

தமிழ் திரையுலகில் அம்மா, அக்கா போன்ற சீனியர் கதாபாத்திரங்களில் அறியப்பட்ட சார்மிளா, 90களில் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்கள் நடித்துள்ளார்..

குறிப்பாக மலையாளத் திரையுலகில் பிசியாக இருந்த அவர், 38 படங்கள் நடித்து ஒரு காலத்தில் முக்கிய நடிகையாகவும் வலம் வந்தவர்..

இவர் 1997ல் அர்ஜுனன் பிள்ளையும் அஞ்சும் மக்களும் என்ற மலையாளப் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அப்போது, படப்பிடிப்பில் கேரளாவில் ஒரு ஹோட்டலில் தன்னுடன் பெண் உதவியாளர் மற்றும் ஒரு ஆண் உதவியாளர் தங்கியிருந்ததாகவும், அப்போது தான் எதிர்பாராத சம்பவம் நடந்ததாக கூறியுள்ளார்.

தான் தங்கியிருந்த ஹோட்டல் ரூமுக்குள், படத்தின் தயாரிப்பாளர் மோகனன் மற்றும் மேனேஜர் சண்முகம் மற்றும் அவர்களது நண்பர்கள் சிலர் புகுந்து தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்..

உடனே அறையில் இருந்து தப்பி சென்று ஹோட்டல் வரவேற்பாளரிடம் புகார் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளாமல் இருந்த சூழலில், அங்கு வந்த ஆட்டோ டிரைவர் தான் தன்னை காப்பாற்றியதாக கூறினார்.

அத்துடன் தன்னுடன் இருந்த பெண் உதவியாளர் உட்பட சில நடிகைகள் அந்த கும்பலிடம் சிக்கிக் கொண்டதாகவும், ஜூனியர் ஆர்டிஸ்டுகள் பலரிடம் அத்துமீறியதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார்..

இதே போல் பரிணயம் என்ற படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் ஹரிஹரன் தன்னை அழைத்ததாகவும், அப்போது அவர் அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு கேட்டதாகவும் பகீர் கிளப்பியுள்ளார் சார்மிளா...

அதுவும் தனது நண்பர் மூலம் தன்னிடம் இந்த விஷயத்தை கூறியதாக தெரிவித்த அவர், அதனை நிராகரித்ததும், படத்தில் இருந்து இயக்குநர் தன்னை நீக்கி விட்டதாக கூறியுள்ளார்.

தனது நண்பரையும் படத்தில் இருந்து நீக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இப்படி அட்ஜஸ்ட்மென்டுகளை நிராகரித்ததாலேயே பல பட வாய்ப்புகளை இழந்ததாக குறிப்பிட்ட அவர், 4 மொழிகளில் நடித்துள்ளேன் இருப்பினும் மலையாள திரையுலகில் தான் இது போன்ற மோசமான பிரச்சனைகள் ஏற்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தனக்கு ஒரு மகன் இருப்பதால், இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்க விரும்பவில்லை என தெரிவித்த அவர், இதுவரை நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என 28 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்ததாக அடுத்தடுத்து பகீர் கிளப்பினார்.

ஏற்கனவே வழக்கு, விசாரணை, குற்றச்சாட்டுகள் என மலையாளத் திரையுலகம் ஸ்தம்பித்து போயுள்ள சூழலில், சார்மிளாவின் குற்றச்சாட்டுகள் கதிகலங்க செய்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்