இந்தியாவுக்குள் ஊடுருவிய கொடிய வைரஸ்.. உறுதி செய்த மத்திய அரசு - "உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும்"

x

இந்தியாவில் ஏற்கனவே Clade 2 வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கேரளாவில் Clade 1 வகை குரங்கம்மை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கம்மை தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஏற்கனவே வழிக்காட்டல்களை வெளியிட்டது. இப்போது மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்பா சந்திரா அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் குரங்கம்மை பரவல், சிகிச்சை தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும், மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தலுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் சிகிச்சை முறையை பின்பற்ற வேண்டும், நோய் தொற்றை அறிய மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும், மாநில மற்றும் மாவட்ட அளவில் ஆயத்த நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பீதியடைய வேண்டாம் என்றும் பாதிப்பு தொடர்பாக தகவல் தெரிவிப்பதில் கால தாமதம் வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்