குமரியிலிருந்து கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படும் சாமி சிலைகள்.. பிரமாண்டமாக நடந்த ஊர்வலம்
ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவிற்காக குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து சாமி சிலைகள் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் வைத்து பாதுகாக்கப்படும் மன்னர் உறைவாழ் ஆகியவை பல்லக்கு மற்றும் யானையின் மீது ஊர்வலமாக கேரளாவுக்கு எடுத்து செல்லப்படுவது வழக்கம். அதன்படி , குழித்துறை வந்தடைந்த சாமி சிலைகளுக்கு மலர் தூவி தூவி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் இரு மாநில போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் சாமி சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story