9 பேரை கடித்த நாய் உயிரிழப்பு.. கேரளாவில் பரபரப்பு

x

கேரளாவில் நடந்து சென்ற சிறுவன், பெண்கள் உட்பட 9 பேரை கடித்த நாய், உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனையில் ரேபிஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொச்சி மூவாட்டுபுழாவில் கடந்த வியாழக்கிழமை காலை தெருவில் சென்ற பெண்கள், வேலைக்கு சென்றவர்கள் என ஒன்பது பேரை துரத்தி துரத்தி தெருநாய் கடித்தது. உடனடியாக அனைவரையும் மூவாட்டுப்புழா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிடிபட்ட நாய் மூவாட்டுபுழா, கால்நடை மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு பின்னர் வடவுக்கோட்டில் உள்ள சிறப்பு பராமரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தது. பிரேத பரிசோதனையில், அந்த நாய்க்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.]


Next Story

மேலும் செய்திகள்