கேரளாவை உலுக்கிய கொலை வழக்கு.. கள்ளகாதலனுக்கு குறைந்த தண்டனை. மனைவிக்கு இடியை இறக்கிய உயர்நீதிமன்றம்

x

திருவனந்தபுரம் அட்டிங்கல்லைச் சேர்ந்த லிஜேஷ் என்பவரின் மனைவி அனுசாந்தி, திருவனந்தபுரத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் உடன் பணியாற்றிய நினோ மேத்யூ என்பவருக்கும் திருமணத்தை கடந்த உறவு இருந்தது. இவர்களுக்குத் தடையாக இருக்கும் குடும்பத்தினரை கொல்ல திட்டமிட்டு, லிஜேஷின் வீட்டுக்கு வந்த நினோ மேத்யூ, அனுசாந்தியுடன் சேர்ந்து அவருடைய 3 வயது மகள் மற்றும் மாமியாரை கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். அனுசாந்தியின் கணவர் லிஜேஷ், கொலை முயற்சியில் காயங்களுடன் உயிர் தப்பினார். கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அனுசாந்திக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், நினோ மேத்யூவிக்கு தூக்குத் தண்டனையும் விதித்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அனுசாந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், நினோ மேத்யூவிற்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. ஆனால், அனுசாந்தியின் கோரிக்கையை நிராகரித்து, இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.


Next Story

மேலும் செய்திகள்