தமிழக அரசு பஸ் கண்டக்டரை கும்பலாக தாக்கிய கேரள நபர்கள் - காது கூசும் வார்த்தை.. அதிர்ச்சி காட்சி
தமிழக அரசு பஸ் கண்டக்டரை கும்பலாக தாக்கிய கேரள நபர்கள் - காது கூசும் வார்த்தை.. அதிர்ச்சி காட்சி
கேரளாவில் தமிழக அரசு பேருந்து நடத்துனர் தாக்கப்பட்ட சம்பவத்தில், 4 பேர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கூடலூரில் இருந்து வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி பகுதிக்கு தமிழக அரசு பேருந்து இயக்கப்பட்டது. இதில் நடத்துநர் மணிகண்டன் ஜன்னல் வழியாக எச்சில் துப்பிய போது, பின்னால் பயணித்த கேரள பயணி மீது பட்டதாகவும், இதனால் கோபப்பட்ட பயணி நடத்துனரை கடுமையாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. நடத்துனர் மணிகண்டன் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும், பேருந்து வழிகடவு பகுதியில் நின்ற போது கேரள பயணிக்கு ஆதரவாக சிலர் வந்து நடத்துனர் மணிகண்டனை தாக்கியுள்ளனர்.
Next Story