இணையத்தை Vibe-ல் வைத்துள்ள ’காவாலா’... தமன்னாவிற்கே டப் கொடுக்கும் தாத்தா - பாட்டீஸ் பெர்பார்மென்ஸ்

x

வெள்ளித்திரையில் பிரபலமான பாடல்களுக்கு, முதியவர்கள் நடனமாடிய வீடியோ இன்ஸ்டா பக்கத்தில் வைரலான நிலையில், அது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு....

இந்த வயதிற்குமேல் இனி என்ன செய்துவிட முடியும் என சலித்துக்கொண்டு முடங்கி கிடப்பவர்களுக்கு மத்தியில், வெள்ளித்திரையின் புத்தும் புது பாடல்களுக்கு, நடனமாடி தங்களின் மன வலிக்கு மருந்து தேடிக்கொள்கிறது உறவினர்களால் கைவிடப்பட்ட இந்த முதியவர் பட்டாலம்...

1970 களில் வெளியான பழம் பாடல்கள் தொடங்கி, தற்போது பிரபலமாகியுள்ள ஜெயிலர் படத்தின் "காவாலே" பாடல்கள் வரை அசத்தல் நடனமாடிய இந்த முதியவர்கள் அனைவரும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த, அடைக்கலம் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளவர்கள்.

அங்கிருக்கும் தாத்தாக்களும், பாட்டிகளும் தங்களின் மனக்கவலைகளை மறக்க ஆடிப்பாடி மகிழ்வது வழக்கம். அது போன்ற ஒரு கொண்டாட்டமான சூழலில் எடுக்கப்பட்ட வீடியோதான், சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்டாகி மில்லியன் கணக்கான பார்வைகளை கடந்திருக்கிறது. குழுவாக இணைந்து, ஒரே நடனத்தை டைமிங் மிஸ் ஆகாமல், ஆடி அசத்துயிருக்கின்றனர்.

ட்ரெண்டிங்கில் இருக்கும், ஜெயிலர் படத்தின் காவாலே பாடலுக்கு, இளைஞர்கள் ரசனையாக ஆடி சமூக வலைதளத்தில் பதிவியேற்றிருந்தாலும், இவர்கள் நடனமாடி வெளியிட்ட அந்த வீடியோதான் அதிகம் கவனத்தை ஈர்த்த வரிசையில் இருக்கின்றது.

உள்ளே டி சர்டும், வெளியே சட்டையும் அணிந்து தாத்தா ஒருவர் நடுவே, பெர்ஃபாமன்ஸ் பண்ண மற்றவர்கள் அவரை சுற்றி நின்று ஆடியிருக்கும் காட்சி, பார்வையாளர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறடு. அந்த அளவிற்கு க்யூட்டான பர்பாமென்ஸ் கொடுத்திருக்கின்றனர்.

பிரபலமாகியுள்ள இவர்களின் நடன காட்சிகளால், முதியோர் இல்லத்துக்கும், அவர்களின் சமூக வலைதள பக்கங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு தற்போது மில்லியன் கணக்கானவர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

தோல்தான் சுருங்கி விட்டது, ஆனால் மனது இன்னும் இளமையாகவே இருப்பதாக கூறுகின்றனர் முதியோர் இல்லத்தை சேர்ந்தவர்கள்.


Next Story

மேலும் செய்திகள்