ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - சுற்றுலா பயணிகளுக்கு தடை

x

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், பருவ மழை தீவிரமாக

பெய்து வருவதால், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு

கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாற்று

வெள்ளம் கரைபுரண்டு வருவதால் அருவியில் தண்ணீர் பலத்த இரைச்சலுடன் விழுகிறது. அருவியில் ஏற்பட்டுள்ள

வெள்ளப்பெருக்கு காரணமாக, இன்று 2வது நாளாக ஆழியாறு

கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல, பொள்ளாச்சி

வனத்துறை தடை விதித்துள்ளது. அருவிக்கு செல்லும் வழி

மூடப்பட்டுள்ளது. கவிருவி பகுதியில் வனத்துறையினர் தீவிர

கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்