"40 பேர் மீது பாய்ந்த வழக்கு.." மீண்டும் தொடங்கிய காவிரி நீர் பிரச்சனை | Kaveri | Water | Thanthitv
கர்நாடக அரசு வழங்க வேண்டிய காவிரி நீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், பூம்புகாரில் இருந்து மயிலாடுதுறை வழியாக திருவாரூருக்கு பேரணி நடைபெற்றது. மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் உரிய அனுமதியின்றி ஊர்வலம் நடத்தி, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, பி.ஆர்.பாண்டியன் உள்பட 40 பேர்
மீது திருவாரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story