காவிரி நீர் திறப்பு - கர்நாடகாவுடன் தமிழக அரசு வாதம் | Kaveri River | Karnataka | Thanthi TV

x

கர்நாடகாவில் அதிக மழை காரணமாக காவிரியில் திறக்கப்படும் உபரி நீரை, தமிழகத்திற்கு தர வேண்டிய நீராக கணக்கில் கொள்ளக் கூடாது என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 34வது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி, அக்டோபர் மாதம் 20 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. கர்நாடகாவில் அதிக மழை காரணமாக காவிரியில் திறக்கப்படும் உபரி நீரை, தமிழகத்திற்கு தர வேண்டிய நீராக கணக்கில் கொள்ளக் கூடாது என வலியுறுத்தியதாகவும் தமிழக நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்