கடல் போல் மாறிய காவிரி - கரை தாண்டும் காட்டாற்று வெள்ளம் - உயிர் பயத்தில் நடுங்கும் மக்கள் | Kaveri
காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 86 ஆயிரம் கன அடியாக அதிரடி உயர்ந்துள்ளது. இன்று மாலைக்குள் ஒரு லட்சம் கன அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது. கர்நாடக அணையில் இருந்து, நீர் திறப்பு 1.5 லட்சம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கலில் இரண்டு கரைகளையும் தொட்டபடி, காற்றாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர கிராமங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story