தேசத்தை திரும்பி பார்க்க விட்ட முக்கிய சந்திப்பு.. மாறும் அரசியல் களம்

x

காஷ்மீர் செல்லும் வழியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை, மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் சந்தித்து பேசினர். பாரீஸ் ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் வினேஷ் போகத் தகுதிநீக்கம் அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சமீபத்தில் ஷம்புவில் போராடும் விவசாயிகளை சந்தித்து வினேஷ் போகத் ஆதரவை தெரிவித்திருந்தார். அரியானா தேர்தலில் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் என்ற பேச்சுக்கு மத்தியில் இருவரிடமும் ராகுல் பேசியிருப்பது முக்கியம் பெற்றுள்ளது. ராகுல் பேச்சை தொடர்ந்து இருவரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் எனவும் அதிகாரப்பூர்வமாக காங்கிரசில் இணையலாம் எனவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்