ஆவேசம் பொங்க திரண்ட மக்கள்... ஸ்தம்பித்த போக்குவரத்து... குவிந்த போலீசார்... பரபரத்த கரூர்

x

கரூர் அருகே அமைக்கப்பட்டு வரும் தனியார் காற்றாலை மின் கம்பங்களை மாற்றுப்பாதையில் அமைக்க கோரி, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிச்சம்பட்டியில் இருந்து மதுக்கரை வரை செல்லும் மண் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பகுதி விவசாயிகள் பல ஆண்டாக விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் முன் அறிவிப்பு ஏதுமின்றி தனியார் காற்றாலை நிறுவனம் மின் வழிப்பாதை அமைப்பதற்கான பணி நடைபெற்று வருவதாகவும்,கூறப்படுகிறது. இதைக்கண்டித்து, அப்பகுதி மக்கள், மஞ்ச நாயக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்