ஹேக்கர்கள் பிடியில் சிக்கிய மின் வாரிய வாட்ஸ்அப் குழு

x

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக பொதுமக்களுக்கு

தகவல்களை கொண்டு சேர்க்க, மாவட்ட அளவில் வாட்ஸ்அப் குழுக்கள் செயல்படுகின்றன.இதில் கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மின்வாரிய குழுவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் லோகோவை பதிவிட்டு, ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவலை கண்டவுடன் செய்தியாளர்கள் சார்பில் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை செய்து காவல் துறையினருக்கு தெரிவித்ததை அடுத்து, மின்வாரிய வாட்ஸ்அப் குழு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆண்ட்ராய்டு ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவுரை கூறியுள்ளனர்.

தற்போது அந்த குழுவில் இருந்து, ஹேக் செய்யப்பட்ட அதிகாரியின் செல்போன் எண் நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்