அதிர்ந்த கரூர்.... அதிமுக முன்னாள் அமைச்சர் பெயரில் மெகா மோசடி... அம்பலமான பகீர் பின்னணி

x

கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்தி சீட்டு கம்பெனி தொடங்கி, மோசடியில் ஈடுபட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், வையம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில், புதிதாக சீட்டு கம்பெனியைத் தொடங்கி உள்ளார். அந்த நிறுவனத்துக்கு

எம்.ஆர்.வி. என்று பெயர் வைத்திருப்பதால், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெயரில் சீட்டு கம்பெனி நடத்தி வருவதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரவக்குறிச்சி காவல்துறைக்கு வந்த தகவலின்பேரில், போலீசார் அங்கு சென்று ராஜ்குமாரிடம் விசாரித்தபோது, அவர் அனுமதி இன்றி சீட்டு கம்பெனி தொடங்கி இருப்பது தெரியவந்தது. அவர் வேடசந்தூரிலும் அனுமதியின்றி சீட்டு கம்பெனி தொடங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் விளம்பர நோட்டீஸ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்