யார் மகன், மகள் என தெரியாமல் மேலே கை வைத்தனரா கான்ஸ்டபிள்கள்? "வாங்க மேல.. உங்களுக்கு இருக்கு" அல்லோகலப்பட்ட கரூர் DSP ஆபீஸ்
கரூரில் ஆயுதப்படை காவலரை தாக்கிய எஸ்.ஐ. மகன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூரில் கோயில் திருவிழா நடைபெற்றபோது, ஆயுதப்படை காவலரான சரவணன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வடக்கு காந்தி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவருடைய நண்பர்கள், மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட சரவணனை சூர்யா மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து தாக்கியதில் சரவணனுக்கு கை முறிவு ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது வழக்குப்பதிவு செய்த போலீசார், நள்ளிரவில் சூர்யா மற்றும் அவருடைய நண்பர்களை கைது செய்தனர். சூர்யாவின் தாயார் லதா,
தாத்தங்கையார்பேட்டை காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பசுபதிபாளையம் காவல் நிலையத்துக்கு வந்த சூர்யாவின் சகோதரிகள் வைஷாலி மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும், கரூர் துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.