பதறவைக்கும் வீடியோ ஆதாரத்துடன் SP ஆபிஸ் ஓடி வந்த பெண்.. கரூரில் என்ன நடந்தது?

x

பதறவைக்கும் வீடியோ ஆதாரத்துடன் SP ஆபிஸ் ஓடி வந்த பெண்.. கரூரில் என்ன நடந்தது?

கரூரில் நிலத்தை அபகரிப்பதற்காக தன்னை தாக்கி கொலை செய்ய முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பூஞ்சோலைப்பட்டியை சேர்ந்த சிலம்பாயி என்பவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த தங்கவேல் குடும்பத்தினர் உரிமை கோரி பிரச்சனை செய்து வருவதாக புகாரில் தெரிவித்துள்ளார். நிலத்திற்குச் சென்ற தன்னை கொலை மிரட்டல் விடுத்து கொடூரமாக அவர்கள் தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். நிலத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்