இரு தரப்புக்கு இடையே பயங்கர மோதல்.. அதிரடி காட்டிய போலீஸ்.. போராட்டத்தில் குதித்த ஊர்மக்கள்..
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே காணியாளம்பட்டியில், பேக்கரி ஒன்றில், கடந்த ஏழாம் தேதி இரண்டு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். ஒரு கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் மீது போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஒரு தரப்பினரை மட்டும் கைது செய்ததை எதிர்த்து, அந்த கிராம மக்கள் கடவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தினர். காணியாளம்பட்டி கிராமத்தில் கடையடைப்பு நடத்தப்பட்டது.
Next Story