நர்சிங் கல்லூரி விடுதியில் பேரதிர்ச்சி... திடீரென மூச்சுத்திணறி துடித்த 19 பேர்... உச்சகட்ட பரபரப்பு
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நர்சிங் கல்லூரி விடுதியில், எலிகளை விரட்ட தெளிக்கப்பட்ட ரசாயன கலவையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மாணாக்கர்கள் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 3 பேருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் மாற்றப்பட்டனர். மீதமுள்ளவர்கள் தற்போது உடல் நலம் தேறி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, விடுதி நிர்வாக ஊழியர்கள் மீது பி.என்.எஸ் சட்டத்தின் 286வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story