வீட்டிற்குள் பறந்த வந்த கற்கள்..குலை நடுங்கி போன கிராமம் ..திகிலில் மக்கள்
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில், வக்பு வாரிய உறுப்பினர் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர். கட்கோல் கிராமத்தில் சிலரது நிலத்திற்கு வக்பு வாரியம் உரிமை கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கட்கோல் கிராமத்தில் உள்ள வக்ஃப் வாரிய உறுப்பினர் முகமது ரஃபியின் வீடு மற்றும் அருகில் உள்ள சில வீடுகள் மீது, அதே கிராமத்தை சேர்ந்த சிலர் கற்களை வீசி தாக்கினர். தகவலறிந்து சென்ற போலீசார், 30 பேரை கைது செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், கிராம மக்களிடம் சமாதான கூட்டம் நடத்தி பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
Next Story