கர்நாடகாவை உலுக்கிய பாலியல் வழக்கு... சிறையிலிருந்து வெளியே வந்தார் எச்.டி.ரேவண்ணா

x

கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின்

பேரனும் ஹாசன் தொகுதி எம்.பியுமான பிரஜ்வல்

ரேவண்ணா பல பெண்களுடன் இருக்கும் ஆபாச

வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெர்மனிக்கு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவை

கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது வீட்டு பணிப்பெண் அளித்த

பாலியல் மற்றும் ஆள்கடத்தல் புகாரின் பேரில்

பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி.ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கடந்த 4 ந்தேதி கைது செய்து பெங்களூரு

பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் எச்.டி ரேவண்ணா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை விசாரித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றம் அவருக்கு நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதுகுறித்த உத்தரவு சிறைத்துறை நிர்வாகத்திற்கு கிடைக்க தாமதமானதையடுத்து எச்.டி.ரேவண்ணா

சிறையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டார


Next Story

மேலும் செய்திகள்