கிளி ஜோசியருடன் கூட்டு சேர்ந்து உருட்டுகளை உருட்டிய புரோக்கர் ஜோடி - மகன் பாசத்தில் மோசம் போன தாய்
கிளி ஜோசியருடன் கூட்டு சேர்ந்து உருட்டுகளை உருட்டிய புரோக்கர் ஜோடி - மகன் பாசத்தில் மோசம் போன தாய்
காரைக்கால் அருகே விவாகரத்தான இளைஞருக்கு மறுமணம் செய்ய தோஷம் நீக்குவதாக கூறி இரண்டரை லட்ச ரூபாய் பறித்த கிளி ஜோசியர் மற்றும் போலி திருமண புரோக்கர் தம்பதியரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த நெடுங்காடு நல்லாந்தூர் கிராமத்தை சேர்ந்த சகுந்தலா என்ற மூதாட்டி விவாகரத்தான தனது மகனுக்கு மறுமணம் செய்ய
விரும்பினார். இதையொட்டி குறி சொல்லும் கிளி
ஜோசியர் முனியசாமியை அணுகிய போது தோஷம்
நீக்குவதாக கூறி 32 ஆயிரம் ரூபாய்க்கு பித்தளை பூஜை பொருட்கள் மற்றும் சிறிய சாமி சிலைகளை வாங்கி தர சொல்லியுள்ளார். மேலும் திருமண புரோக்கர் என்று கூறி வினோத், சுகந்தி தம்பதியரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
3 பேரும் சேர்ந்து மூதாட்டியிடமிருந்து இரண்டரை
லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி வாங்கியுள்ளனர்.
மகனின் மறுமணத்திற்கு எதுவும் நடக்காததால்
பணத்தை திருப்பி கேட்ட மூதாட்டிக்கு 3 பேரும்
கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த
புகாரின் பேரில் போலீசார் கிளி ஜோசியர் மற்றும்
போலி திருமண தரகர் தம்பதியரை கைது செய்து
தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.