இரண்டு 10ம் வகுப்பு மாணவர்கள் பலி...மாவட்டத்தையே சலித்தெடுத்த போலீஸ் - எமனோடு பறக்கும் பிள்ளைகள்
இரண்டு 10ம் வகுப்பு மாணவர்கள் பலி
மாவட்டத்தையே சலித்தெடுத்த போலீஸ்
எமனோடு சிட்டாக பறக்கும் பிள்ளைகள்
பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பள்ளிக்கூடங்களுக்கு ரேஸ் பைக்குகளில் வந்த மாணவர்களை பிடித்த காரைக்கால் போலீசார், அவர்களின் பெற்றோர்களை அழைத்து கண்டித்து அதிரடி காட்டியிருக்கின்றனர்...
உயர் ரக சொகுசு பைக், ரேஸ் பைக்குகள் தொடங்கி.. நூற்றிற்கும் மேற்பட்ட பைக்குகள் பள்ளி மாணவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது..
உரிய ஆவணங்களும், லைசென்ஸ்களும் இல்லாமல் பைக்குகளில் அதிவேகமாக பள்ளிக்கூடத்திற்கு வந்த மாணவர்களை காரைக்கால் போக்குவரத்து போலீசார் களையெடுத்து சம்பவம் செய்திருக்கின்றனர்..
இவ்வாறு பள்ளி மாணவர்கள் லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டியதில் ஏற்பட்ட விபத்தில்... இரண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் காரைக்காலில் உயிரிழந்திருக்கின்றனர்..
இதையடுத்து, காரைக்கால் போக்குவரத்து போலீசார் 10 குழுக்களாக பிரிந்து... வாகன தணிக்கையில் ஈடுபட்ட நிலையில், பள்ளிக்கு பைக்குகளில் வந்த மாணவர்களை பிடித்ததில்தான் இந்த சம்பவம்..
தொடர்ந்து, பைக்குகளுக்கு அபராதம் விதித்து சுற்றறிக்கை வெளியிட்ட போலீசார், மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து கண்டித்த நிலையில், அவர்களை உறுதிமொழி எடுக்கவும் வைத்திருக்கின்றனர்...
போலீசாரின் இந்த நடவடிக்கை தங்களின் நீண்ட நாள் தலைவலியை சரி செய்து விட்டதாக சொல்லி ஆசுவாசம் கொள்கின்றனர் காரைக்கால் மக்கள்...