அப்பாவின் அடிக்கு பயந்து சிறுவன் செய்த செயல்.. 2 நாள் கழித்து..

x

அப்பாவின் அடிக்கு பயந்து சிறுவன் செய்த செயல்.. 2 நாள் கழித்து..

கன்னியாகுமரி அருகே காணாமல் போன சிறுவனை போலீசார், இரண்டு நாள் கழித்து மீட்டுள்ளனர்.

சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று, லாரன்ஸின் மனைவி, தனது இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது மகன் ஆஷிக் கழிவறைக்கு செல்ல வேண்டும் எனக் கூறி வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு, தேவாலயம் திரும்பவில்லை. மகனை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காணாமல் போன சிறுவன் குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், மார்த்தாண்டம் பகுதியில் சிறுவன் மீட்கப்பட்டான். இது குறித்து போலீசார் கூறுகையில், தந்தையிடம் அடி வாங்க முடியாமல், தான் வீட்டை விட்டு வெளியேறியதாக சிறுவன் கூறியுள்ளான். மேலும், வீட்டில் இருந்து பணம் எடுத்துக் கொண்டு வந்திருந்த சிறுவன், மார்த்தாண்டம் பகுதி பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார். அப்பகுதியில் கடை வைத்திருந்த பெண் ஒருவர், சிறுவனுக்கு அன்றைய இரவில் அடைக்கலம் கொடுத்து மறுநாள் காவலர்களிடம் ஒப்படைத்தார் என தெரியவந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்