தாய்லாந்தில் கன்னியாகுமரி இளைஞர்களுக்கு நடந்த அதிர்ச்சி - தீயாய் பரவும் வீடியோ

x

கன்னியாகுமரி மாவட்டம் பரக்குன்று பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பிரியா. கடந்த மாதம் போலந்து நாட்டிற்கு வேலைக்கு சென்ற இவர், போலாந்து நாட்டில் நல்ல வேலை வய்ப்பு இருப்பதாக உறவினர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பிய 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கிருஷ்ணப்பிரியாவைத் தொடர்பு கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், கிருஷ்ணப்பிரியா சொன்னதன் பேரில், 5 லட்சம் ரூபாய் பணத்துடன் சுற்றுலா விசாவில் இளைஞர்கள் தாய்லாந்திற்கு சென்று இருக்கின்றனர். அங்கு இவர்களை வரவேற்ற பிரபாகரன் என்பவர், அனைவரையும் விடுதியில் தங்க வைத்த நிலையில், சமயம் பார்த்து இளைஞர்கள் கொண்டு வந்த 70 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாய்லாந்து போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லையெனக் கூறும் இளைஞர்கள், பெற்றோரிடம் பணம் கேட்டு சொந்த ஊர் திரும்பிய நிலையில், கன்னியாகுமரி மாவட்ட போலீசாரிடம் புகாரளித்தனர். இதனிடையே, தாய்லாந்தில் பணம் பறிபோன அடுத்த கணமே அந்நாட்டு போலீசாரை தங்களின் ஹோட்டல் அறைக்கு அழைத்து வந்து இளைஞர்கள் புகாரளிக்கும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்