காதலை ஏற்க மறுத்த இளம் பெண்...3வது முறையாக இளைஞர் செய்த காரியம் - குமரியில் அதிர்ச்சி

x

காதலை ஏற்க மறுத்த இளம் பெண்...3வது முறையாக இளைஞர் செய்த காரியம் - குமரியில் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணை 3வது முறையாக கத்தியால் குத்தி விட்டு மிரட்டல் விடுத்த இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தக்கலை அன்புநகரை சேர்ந்த ஜெபின் என்பவர், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த‌தாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இளம்பெண்னின் வீட்டில் நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக, புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமினில் வெளிவந்த ஜெபின், காதலிக்குமாறு தொடர்ந்து தொந்தரவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், அந்த பெண்ணின் வீட்டின் அருகே வைத்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றுள்ளார். படுகாயமடைந்த இளம்பெண் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே நேரத்தில், இளம்பெண்ணின் வாட்சாப்புக்கு, மிரட்டல் விடுத்து வீடியோ அனுப்பியுள்ளார். இதையடுத்து, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்பட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான ஜெபினை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்