பிரபல கோவிலில் சிலை மாயம்.. அதிர்ச்சியில் கொந்தளித்த பக்தர்கள்
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் கோவிலின் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் கோவிலுக்கு சென்ற போது, கோவிலின் கன்னி மூலையில் பல ஆண்டுகளாக இருந்த சிலை ஒன்று காணவில்லை எனவும் அந்த சிலை எங்கே வைக்கப்பட்டுள்ளது என அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் கூறும் போது, பாதுகாப்பு கருதி இந்த சிலை, நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Next Story