'பிரச்சினை வேண்டாம் இதோடு விட்டுவிடு' - இளைஞர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
குமரியில் காவல்நிலையம் புகைப்படத்துடன் ரீல்ஸ் வெறியர்கள் புதிதாக வீடியோ வெளியிட்டிருப்பது முகம் சுழிக்க வைத்துள்ளது. குமரி மாவட்ட சாலைகளில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வீடியோ வெளியிடுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்து வருகின்றனர். 12 சிறார்களை பிடித்து 7 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார், பெற்றோர்களுக்கு அபராதமும் விதித்தனர். இந்நிலையில், குளச்சல் காவல் நிலைய புகைப்படத்துடன், பிரச்சனை வேண்டாம் இதோடு விட்டுவிடு என பைக் சாகத்துடன் இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Next Story