வேர்களை தேடி திட்டம் - குமரிக்கு வந்த 100 அயலக தமிழ் இளைஞர்கள.. - வரவேற்ற அமைச்சர்..
வேர்களை தேடி திட்டத்தின் கீழ், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மையன்மர், கனடா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நூறு அயலக தமிழ் இளைஞர்கள் இன்று கன்னியாகுமரி வந்தடைந்தனர். அவர்களை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மற்றும் சுற்றுலாதுறை அதிகாரிகள் வரவேற்று, திருவள்ளுவர் சிலையை காண சுற்றுலா படகில் அனுப்பி வைத்தனர். இத்திட்டம் மூலம் தமிழ் கலாச்சாரம், தமிழ் பாரம்பரியத்தை நேரில் பார்க்க முடிந்தது என்றும், எங்கள் நாட்டு மக்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் இதை எடுத்து செல்லும் விதமாக உள்ளதாக இளைஞர்கள் கூறினர்..
Next Story