போலி குற்றச்சாட்டை உடைக்க சொந்த செலவில் சிசிடிவி பொருத்திய சம்பவம்

x

தமிழகத்தில் முதன் முறையாக குமரியில் உள்ள அரசு நியாய விலைக் கடையில் பெண் விற்பனையாளர் ஒருவர் தன் மீதான குற்றச்சாட்டைப் பொய்யென நிரூபிக்க சொந்த செலவில் சிசிடிவி கேமராவைப் பொருத்தியுள்ளார்... நித்திரவிளை அருகே நடைக்காவு பகுதியை சேர்ந்த நிஷா ராணி என்பவர் பார்த்திப புரம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சொந்தமான அரசு நியாய விலைக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் ரேஷன் பொருட்களைக் கடத்த துணை போவதாய் சிலர் குற்றம் சாட்டிய நிலையில், போலீசாரின் அறிவுரையின் பேரில் தன் மீதான குற்றச்சாட்டு உண்மையல்ல என நிரூபிக்க நியாய விலைக்கடையில் நிஷா ராணி தனது சொந்த செலவில் சிசிடிவி கேமராவைப் பொருத்தியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்