குமரியில் மோடி தியானம் செய்வதில் சிக்கல்..?
குமரியில் பிரதமர் மோடி தியானம் செய்ய அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். மே 30 முதல் ஜூன் 1 வரை குமரியில் பிரதமர் மோடி தியானம் செய்ய இருப்பதாக வெளியான தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார். வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர காலத்தில், இதுபோன்ற நிகழ்ச்சி மூலம் மறைமுகமாக பிரச்சாரம் செய்ய பிரதமர் முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அனுமதி வழங்க கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ள செல்வப்பெருந்தகை, தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்க உள்ளதாகவும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story