குமரியில் வட்டாரத்தில் தீயாய் பரவும் மோடியின் மார்ஃபிங் போட்டோ

x

பிரதமர் மோடியின் படத்தை அரை நிர்வாணமாக மாற்றி புகைப்படம் பதிவிட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாஜகவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடி தியானம் செய்வதற்காக கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு வருகை தந்துள்ளார். பிரதமரின் தமிழக பயணத்தை விமர்சித்து கன்னியாகுமரியை சேர்ந்த நிர்மல் ஸ்டாலின், சசிகுமார் ஆகியோர் பிரதமர் மோடியின் படத்தை அரை நிர்வாணமாக மாற்றி பதிவிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கன்னியாகுமாரி மாவட்ட பாஜகவினர், பிரதமரின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து வெளியிட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்