2கிமீக்கு தலை கீழ் பயணம்-17½டன் டிப்பர் லாரியை இழுத்த லெஜெண்ட்- எதற்காக தெரியுமா?

x

கன்னியாகுமரி மாவட்டம் மாராயபுரம் நியூ ஸ்டார் நற்பணி மன்றம் சார்பில் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்காக குன்னத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஓடும் ஆம்னி காரின் மேல் பகுதியில் தலைகீழாக நின்று சுமார் இரண்டு கிலோ மீட்டர் பயணம் செய்தார். கண்ணன் என்பவர், பதினேழரை டன் எடை கொண்ட டிப்பர் லாரியை 35 மீட்டர் தூரம் இழுத்தார். இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து வெளிவரவும், கட்டுக்கோப்பான உடலை பெறவும் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்