குமரியை புரட்டி போட்ட கனமழை.. நீரில் குதித்து ஓடும் நாய்கள்

x

குமரியை புரட்டி போட்ட கனமழை.. நீரில் குதித்து ஓடும் நாய்கள்

குமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக மங்காட்டில் இருந்து முன்சிறை வட்டார வளர்ச்சி அலுவலகம் செல்லும் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரால் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்... வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வரும் மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதார சீர்கேடு உண்டாகி மக்கள் நோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். முறையான திட்டமிடல் இல்லாமல் வடிகால் நீரோடை அமைத்ததால் தற்போதும் இந்த தண்ணீர் வழிந்தோடாமல் தேங்கி நிற்கிறது என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்