சொத்துக்களையும் காலையும் இழந்த Ex ஆர்மி வீரர்... கடைசியில் நேர்ந்த நேரக்கூடாத நிலை

x

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே முதியோர் காப்பகத்தில் தங்கி இருந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர், உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், உடலை பிள்ளைகள் வாங்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புறத்தைச் சேர்ந்த வேதராஜ்- புஷ்பலீலா தம்பதி, மகன் கீதா ஜீவன், தந்தையின் பெயரில் இருந்த சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டு அவரை மார்த்தாண்டம் அருகே ஒரு விடுதியில் தங்க வைத்து பராமரித்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வேதராஜ், தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, காலில் புண் ஏற்பட்டதால், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அவருக்கு முழங்கால் வரை அகற்றப்பட்டது. இதையறிந்த மகள் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று சில நாட்கள் வைத்து பராமரித்து விட்டு முதியோர் காப்பகத்தில் சேர்த்து விட்டார். அங்கு இருக்க பிடிக்காமல் வெளியேறிய வேதராஜை, கொல்லங்கோட்டில் செயல்படும் முதியோர் இல்லத்தில் சமூக ஆர்வலர்கள் சிலர் சேர்த்து விட்டனர். அங்கு அவரை நன்கு கவனித்து வந்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையறிந்த மகளும் மகனும் உடலை வாங்க மறுத்த நிலையில், வேதராஜின் சகோதரர் குடும்பத்தினர் உடலை பெற்றுச் சென்றனர். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சி தலைவர் உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்