கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் பெயரில் பல கோடி மோசடி... பரபரப்பு புகார்

x

கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் பெயரில் பல கோடி மோசடி... பரபரப்பு புகார்

கன்னியாகுமரியில் மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர், பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள கொல்லஞ்சி கிராமத்தின், ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சலோமி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், தனது கணவர் சோபிதாஸ் உடன் சேர்ந்து கொண்டு, தொகுதி எம்.பி. விஜய் வசந்த்தின் கோட்டாவில், மத்திய அரசு நிறுவனங்களில் காலியிடம் இருப்பதாகக் கூறி, இப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரிடம், சுமார் 4 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், ரயில்வே, உணவு பாதுகாப்புக் கழகம் போன்ற நிறுவனங்களில் இருந்து வந்ததாக கூறி, போலியான பணி ஆணையை வழங்கியதாகத் தெரிகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பணத்தை திருப்பிப் பெற்றுத் தருமாறு, போலீசில் புகாரளித்தனர். ஆனால், அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், பணத்தை ஏமாந்தவர்கள் கொல்லஞ்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்