வீட்டின் முன் மிதந்து வந்த சடலம்.. அதிர்ந்து போன மக்கள்

x

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இந்த நிலையில் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் மூதாட்டி சடலம் கிடப்பதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கும்முடிபூண்டி நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்புத் துறையினர் மலை வெள்ளத்தில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து மூதாட்டியின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் மூதாட்டி யார், எதற்காக இங்கு வந்தார் என அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்