தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் கனிமொழி - விருப்பமனு தாக்கல்
தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளார்.
VOVT
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வுக்கான விருப்பமனுவை மார்ச் 7ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தி.மு.க. தலைமை அறிவுறுத்தியிருந்தது. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, ஏராளமானோர் மனுக்கள் சமர்ப்பித்திருந்த சூழலில், செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கனிமொழி எம்.பியும், அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளார். 2019ஆம் ஆண்டு தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி, மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story