நேரடியாக 1 லட்சம் பேருக்கு வேலை இழப்பு? - அச்சத்தில் திருப்பூர் மக்கள்
தேங்காய் கொப்பரை விற்பனை செய்வது தொடர்பான நாபிட் நிறுவன அறிவிப்பால் காங்கேயத்தில் எண்ணெய் ஆலைகள் நஷ்டத்தை சந்திக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்...
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தேங்காய் எண்ணெய் ஆலைகள், தேங்காய் களங்கள் முக்கிய தொழில்களாக உள்ளன...
கடந்த சில ஆண்டுகளாக தேங்காய் வரத்து குறைவு, போதிய விலை கிடைக்காதது, தென்னை மரங்களையும் தேங்காய்களையும் நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் தென்னை விவசாயிகள் மீளா துயரத்தில் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நாபிட் நிறுவனம் கொள்முதல் செய்த தேங்காய் பருப்புகளை தற்போது விற்பனை செய்வதாக அறிவித்தது.
இதனால் விவசாயிகள், எண்ணெய் ஆலை உரிமையாளர்கள், தேங்காய் களம் நடத்திவரும் உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திப்பதுடன் நேரடியாக 1 லட்சம் தொழிலார்கள் வேலை இல்லாத நிலை உருவாகும் என கவலை தெரிவித்துள்ளனர்...