வெஜ் ரைஸ்-க்கு ஊறுகாய் கேட்ட இளைஞர்... மண்டையை உடைத்து ரத்தம் சொட்ட கதறவிட்ட ஹோட்டல் ஊழியர்கள்
காஞ்சிபுரத்தில் வெஜ் ரைஸ் சாப்பிட ஊறுகாய் கேட்ட இளைஞர் மீது, கரண்டியால் ஹோட்டல் ஊழியர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. ரத்தம் சொட்ட சொட்ட நின்ற இளைஞர் தனசேகரை, மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். சம்பவம் குறித்து இருதரப்பும் புகார் அளிக்காததால், போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Next Story