தூய்மை பணியாளர்கள் பகீர் செயல்.. சென்னை அருகே அதிர்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் தொட்டியை, எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தொழிலாளி ஒருவர் சுத்தம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போந்தூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 14 வீடுகள் உள்ள நிலையில், அதில் இரண்டு மகளிர் விடுதி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குடியிருப்பின் கழிவுநீர் தொட்டி நிரம்பியதையடுத்து, பாதுகாப்பு உபகரணம் இன்றி தூய்மை பணியாளர் ஒருவரை வைத்து அதனை சுத்தம் செய்துள்ளனர். இந்நிலையில், இயந்திரத்தை கொண்டு கழிவுநீரை அகற்றாமல், தொழிலாளியை வைத்து சுத்தம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story