கஞ்சா கும்பலால் அலறிய அதிமுக நிர்வாகி வீடு... திமிராக இன்ஸ்டா ஸ்டோரி.. கை, காலை முறித்த `கர்மா'

x

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சூரியகாந்தி. கஞ்சா வியாபாரியான இவர், கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறில் விக்னேஷ் என்பவரை கடந்த மாதம் கொலை செய்தார். இந்த வழக்கில், சூரியகாந்தி உட்பட மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தால் விக்னேஷின் கூட்டாளியும், கஞ்சா வியாபாரியுமான தீபக் என்பவர் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார். இந்நிலையில், கஞ்சா போதையில் சுமார் 20க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து வரதராஜ புரம் பகுதிக்குள் நுழைந்த அவர், கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் தாக்கி, வீடுகளை சூறையாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், அப்பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி சம்பத் குமார் என்பவரின் வீட்டையும் கும்பல் சூறையாடியது.


Next Story

மேலும் செய்திகள்