தீயாய் பரவும் சாமானியனின் ஒற்றை வீடியோ..அதிரும் மாவட்ட நிர்வாகம்.. VAO சீட்டுக்கு வந்த ஆபத்து

x

பட்டா மாறுதல் வழங்குவதற்கு லஞ்சம் கேட்பதாக வீடியோ வெளியான நிலையில், லஞ்சம் கேட்டது உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.போரூர் அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர்சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், கடலூர் மாவட்டத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் பரணிபுத்தூர் பகுதியிலும் இருக்கும் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய முடியாமல் தவித்து வருவதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும், பட்டா மாறுதல் செய்ய 10 ஆயிரம் ரூபாய்வரை அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அங்கிருந்த நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில்

பரணிபுத்தூரிலும் தனக்கு அதே நிலை இருப்பதாகவும் செல்வராஜ் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த புகாரை அடுத்து பரணிபுத்தூரில் உள்ள நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கிரண்ராஜ் லஞ்சம் கேட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உரிய விசாரணை செய்யப்பட்டு லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்