பெண் ஆசிரியர்களிடம் அத்துமீறிய பேராசிரியர்.. "கேவலமா இருக்கு" - வைரலாகும் ஆடியோ
பள்ளிக் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் எண்ணும் எழுத்தும் எனும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாவில் இருந்து 40 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சி காஞ்சிபுரம் செவிலிமேடு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்த 40 ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க களியாம்பூண்டி ஆசிரியர் பயிற்சி பள்ளியை சேர்ந்த இரு பேராசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவரான கந்தவேல் பயிற்சிக்கு வந்த பெண்களிடம் ஆபாசமாக பேசி அத்துமீறியதாக குற்றம்சுமத்தப்பட்டது. இதனிடையே, பெண் ஆசிரியர்கள் குறித்து கந்தவேல் தரக்குறைவாக பேசி வெளியிட்ட ஆடியோ ஒன்றும் வெளியாகி வைரலானது.
Next Story