புயலாய் கிளம்பிய காஞ்சிபுரம் பள்ளி விவகாரம் - ஆசிரியர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

x

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே, மலம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்ட நிலையில், தலைமை ஆசிரியர் அறை அருகே உள்ள கரும்பலகையில் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த திருவந்தவார் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி நேரடியாக சென்று விசாரணை நடத்தி, குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை என மறுப்பு தெரிவித்தார்.இந்நிலையில், குடிநீர் தொட்டி ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டு, மாணவர்களின் குடிநீர் தேவைக்காக மாற்று குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பள்ளித் தலைமை ஆசிரியர் அறை அருகே உள்ள கரும்பலகையில், 'தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்' என்கிற திருக்குறள் ஆசிரியர்களால் எழுதப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்