தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை -உடனே தொழிலார்கள் எடுத்த அதிரடி முடிவு
காஞ்சிபுரத்தில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்கத்திற்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் போராட்டம் குறித்து தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story