தமிழகமே உற்று பார்த்த நம்பிக்கையில்லா தீர்மானம்... கடைசி நேரத்தில் பெரும் டுவிஸ்ட்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு கூட்டம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் தலைமையில் நடைபெற்றது. மேயர் மற்றும் எதிர்ப்பு மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி மேயராக மகாலட்சுமி யுவராஜே தொடர்வார் என தெரியவந்துள்ளது.
Next Story